×

கிரான் டுரிஸ்மோ – திரைவிமர்சனம்

நீல் பிளோம்கேம்ப் இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஆர்லாண்டோ ப்ளூம், ஆர்ச்சி மடெக்வி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விளையாட்டு பயோபிக் படம். பொதுவாக வீடியோகேம்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். புகழ்பெற்ற கார் பந்தய வீரர் ஜான் மார்டன்பரோவின் பயோபிக். வெவ்வேறு விளையாட்டுத் துறையில் போராட்டமான வாழ்க்கை அல்லது தோல்வியடைந்த நிலையில் டேவிட் ஹார்பர், ஆர்லாண்டோ ப்ளூம், ஆர்ச்சி மடெக்வி உலகின் மிக ஆபத்தான ஒரு விளையாட்டிற்காக ஒன்றிணைகிறார்கள்.

மூவரும் சந்திக்கும் துணிச்சலான நிகழ்வுகளும், அதன் பின்னணியும்தான் படத்தின் கதை. விறுவிறு வீடியோ கேம் பாணி கதை, அதில் ரன்னிங், சேஸிங் என கண்களுக்கு விருந்தாக ஆக்ஷன், அதிரடிகளில் மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குநர் நீல் பிளோம்கேம்ப். டேவிட் ஹார்பர், ஆர்லாண்டோ ப்ளூம், ஆர்ச்சி மடெக்வி மூவருமே ஸ்போர்ட்ஸ் கதைக்கான தேகமும், துடிப்புமாக , மேலும் வேகமும் ஒருசேர நம்மைக் திரைக்குள் கடத்துகிறார்கள்.

ஜேக்வெஸ் ஜோஃப்ரெட் ஒளிப்பதிவுதான் படத்தின் வேகத்திற்கும், அதிரடிக்கும் பலம் சேர்த்திருக்கிறது. உடன் லோர்னெ பல்ஃபே இசையும் சேர்ந்து விஷுவல் விருந்தாக நம்மை சீட்டு நுனிக்கு இழுத்து வருகிறது. ஸ்போர்ட்ஸ், கார் பந்தயம், துணிச்சலான கதைக்களம், அடுத்த நொடி என்ன என்னும் ஆர்வத்துடன் படம் பார்க்கும் மக்கள் நிச்சயம் தவர விடக் கூடாத படம் இந்த ‘கிரான் டுரிஸ்மோ’.

The post கிரான் டுரிஸ்மோ – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Neill Blomkamp ,David Harper ,Orlando Bloom ,Archie Madekwii ,John Mortenborough ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!